உல்லாச விடுதியில் திருமணநாள் கொண்டாடிய சின்னத்திரை நடிகை!

ஷபானாவின் கணவர் ஆர்யன், மீனாட்சி பொண்ணுங்க ஆகிய தொடர்களில் நாயகனாக நடித்துவருகிறார். 
உல்லாச விடுதியில் திருமணநாள் கொண்டாடிய சின்னத்திரை நடிகை!
Published on
Updated on
1 min read

செம்பருத்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஷபானா, தனது இரண்டாமாண்டு திருமண நாள் கொண்டாட்டத்தையொட்டி பகிர்ந்துள்ள படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஷபானாவின் கணவர் ஆர்யன், மீனாட்சி பொண்ணுங்க ஆகிய தொடரில் நாயகனாக நடித்துவருகிறார். 

ஜீ தமிழில் 2017 முதல் 2022 வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர் செம்பருத்தி. இந்தத் தொடரில் நடிகை ஷபானா முதன்மை பாத்திரத்தில் நடித்தார். இத்தொடரில் பார்வதியாக பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலிலும் தொடர்ந்து முன்னணி இடங்களில் நீடித்து வந்தது. 

செம்பருத்தி தொடருக்குப் பிறகு தற்போது மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா நடித்து வருகிறார். மிஸ்டர் மனைவி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடரும் டிஆர்பி பட்டியலில் டாப் 5 இடங்களில் ஒன்றாக உள்ளது. 

இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆர்யன் என்ற நடிகரைத் திருமணம் செய்துகொண்டார். பாக்கியலட்சுமி தொடரில் நடித்தவர் நடிகர் ஆர்யன். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருகிறார். 

சின்னத்திரையில் நட்சத்திர தம்பதியான இவர்கள், 2ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உல்லாச விடுதிக்குச் சென்று அங்கு திருமணநாளை இருவரும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான படங்களை நடிகர் ஆர்யன் மற்றும் ஷபானா ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com