ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தமிழ்நாட்டின் டாப் 7 சீரியல்கள்: மீண்டும் முதலிடத்தில் கயல்!

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கயல் தொடர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

News image
Updated On :10 நவம்பர் 2023, 3:58 pm

DIN


சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கயல் தொடர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.  கடந்த முறை வானத்தைப்போல தொடர் முதலிடத்தில் இருந்தது.

தமிழகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளும் சின்னத்திரை தொடர்களை பிரதாமனாகக் கொண்டு ஒளிபரப்பாகின்றன. ஒரு நாளில் அதிகபட்சமாக தொடர்களே ஒளிபரப்பாகின்றன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கயல் - எதிர்நீச்சல் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன. ஒருகட்டத்தில் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. 

இதனிடையே இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் கயல் தொடர் 10.85 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக வானத்தைப்போல தொடர் 10.72 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

3வது இடத்தில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. சிங்கப்பெண்ணே தொடர் 10.65 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

கடந்த மாதம் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர் தற்போது 4வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 9.99 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

சுந்தரி தொடர் 5வது இடத்தில் உள்ளது. சுந்தரி தொடர் 9.94 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

6வது இடத்தில் இனியா தொடர் உள்ளது. இந்தத் தொடர் 7.96 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

7வது இடத்தில் ஆனந்த ராகம் தொடர் உள்ளது. அனுஷா நடிக்கும் இந்தத் தொடர் 7.59 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.