இயற்கைக்கும் யானைகளுக்கும் மிக்க நன்றி: கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 
இயற்கைக்கும் யானைகளுக்கும் மிக்க நன்றி: கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி!
Published on
Updated on
1 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

படம் நல்ல வரவேற்பினை பெற்றுவருகிற நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது நெஞ்சின் அடியாழத்தில் இருந்து கடவுளுக்கும், இயற்கைக்கும், யானைகளுக்கும் மற்றும் ரசிகர்கர்களுக்கும் நன்றி. படத்தினை பாராட்டும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு மிக்க நன்றி. 

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இதுவரை திரையரங்குகளில் பெரும் ஆதவு நெகிழ்ச்சியாக உள்ளது. எங்களது படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. தீபாவளியன்று ஜிகர்தண்டா படத்தினை தியேட்டரில் காணுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X