தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.20 கோடி சம்பளம்! பிரதீப் ரங்கநாதனைக் கைவிட்ட கமல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2023, 9:43 am

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.

தற்போது,  ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடேவின் மாபெரும் வெற்றிக்குப் பின் நாயகனாக நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு ராஜ்கமல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இந்தப் படத்தின் தயாரிப்பில் இருந்து விலகிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என்றும் கூறப்படுகிறது.

லவ் டுடே திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தாலும் தன் இரண்டாவது படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் ரூ.20 கோடி வரை தன் சம்பளத்தை உயர்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லவ் டுடே படத்தை இயக்கி, நடிக்க அவர் ரூ.1 கோடி சம்பளம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.