பார்க்கிங் படத்தின் டிரைலர் எப்போது? ப்ரோமோ விடியோ வெளியீடு!

பார்க்கிங் படத்தின் டிரைலர் தேதியை வெளியிட்டு அதற்கான ப்ரோமோ விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பார்க்கிங் படத்தின் டிரைலர் எப்போது? ப்ரோமோ விடியோ வெளியீடு!

பார்க்கிங் படத்தின் டிரைலர் தேதியை வெளியிட்டு அதற்கான ப்ரோமோ விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது

இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'.  இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பார்க்கிங் படத்தின் டிரைலர் வரும் நவ.17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, அதற்கான ப்ரோமோ விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com