தொடர் பாலியல் தொல்லை.. விசித்ராவுக்கு நேர்ந்த அவலம்.. யார் அந்த நடிகர்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை விசித்ரா, பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசித்திரா
விசித்திரா
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை விசித்ரா, பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நீண்ட காலமாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த பிரபல நடிகை விசித்திராவும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

தற்போதைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில், மிகவும் வயதான போட்டியாளராக விசித்திரா உள்ளார். ஓரிரு வாரங்களில் பிக் பாஸிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 50 நாள்களை கடந்தும் போட்டியில் நீடித்து வருகிறார். ரசிகர்களின் பேராதரவும் விசித்ராவுக்கு உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நேற்று ‘உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பூகம்பத்தால் தடுமாறிய சம்பவம்’ குறித்து போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதில், ஒவ்வொரு போட்டியாளராக தங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான சம்பவம் குறித்தும் அதிலிருந்து மீண்டது குறித்தும் பேசினர்.

அப்போது பேசிய விசித்ரா, பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கை அறைக்கு அழைத்ததாக தெரிவித்தார்.

விசித்திரா பேசியது:

“2001-ஆம் ஆண்டுக்கு பிறகு நான் நடிக்காததற்கு இதுதான் காரணம். இந்த சம்பவம் யாருக்கும் தெரியாது. ஆனால், இன்றுவரை என் மனதில் ஆராத காயமாக இருக்கிறது. முன்னணி நடிகராக இருப்பவரின் படத்தில் நடிக்கச் சென்றிருந்தேன். அப்போது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் சார்பாக அளிக்கப்பட்ட விருந்துக்கு சென்றபோது, படத்தின் கதாநாயகனை சந்தித்தேன். என்னை பார்த்த அந்த நடிகர், என் பெயரைகூட கேட்காமல், நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றவுடன், எனது அறைக்கு வாங்க என அழைத்தார். இதனைக் கேட்டவுடன் செய்வதறியாது எனது அறைக்குச் சென்று பூட்டிக் கொண்டேன்.

மேலும், அந்தப் படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடந்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரை பிடித்து சண்டை பயிற்சியாளரிடன் தெரிவித்தபோது, அந்த பயிற்சியாளர் என் கன்னத்தில் அறைந்தார். தமிழ் படங்களில் நடிக்கும்போது, சண்டை பயிற்சியாளர்கள்தான் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், அங்கு மட்டும் வித்தியாசமாக நடந்தது.

இதையும் படிக்க | கமல் படத்தில் அபிராமி!

இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு 100 படங்களுக்கு மேல் நடித்திருந்தேன். ஆனால், எனக்காக ஒருவரும் கேள்வி கேட்க முன்வரவில்லை. மரியாதையும், கண்ணியமும் கிடைக்காத ஓரிடத்தில் இருக்க வேண்டாம் என்று திரைத்துறையிலிருந்து விலகிவிட்டேன்.” என்று தெரிவித்தார்.

விசித்திரா குற்றம்சாட்டப்பட்டவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா என்றும், 2001ஆம் ஆண்டு வெளியான ‘பாலேவதிவி பாசு’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின்போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகின்றது.

இந்த குற்றச்சாட்டு திரைத்துறையில் புயலைக் கிளப்பிய நிலையில், பலரும் விசித்திராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com