திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2023, 8:05 am

DIN

குட் நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

தற்போது, மணிகண்டன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

மேலும், இப்படத்தில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களை மணிகண்டன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.