கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 
கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரை பார்ப்பதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கிழக்கு வாசல் தொடர் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிகர் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். 

இந்த நிலையில், மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடர் நிறைவடையவுள்ளதால், அந்த நேரத்தில்(மதியம் 1 மணி) கிழக்கு வாசல் தொடர் வரும் டிச. 4 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய தொடரான சக்திவேல் தொடர் வரும் டிச. 4 முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.  கண்ணே கலைமானே தொடர் வரும் டிச.4 முதல் மாலை 4 மணிக்கு  ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com