பிரைம் தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்!

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
பிரைம் தளத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம்!

யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தன. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com