ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இந்த வார பிக்பாஸில் வெளியேறுவது யார்?

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2023, 10:12 am

DIN

பிக் பாஸ் சீசன் 7 தனியார் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த சீசன்களைப் போல் இல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய மாற்றங்கள் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. 

முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

பவா செல்லத்துரை வெளியேறிய காரணத்தால் இந்த வாரம் பிக்பாஸில் வெளியேற்றம் கிடையாது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வாரம் வெளியேறுவது யார் என்பதைத் தீர்மானிக்க சக போட்டியாளர்களால் முன்மொழியப்படும் பட்டியலில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப், மாயா, விஷ்ணு ஆகியோரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து அக்‌ஷயா, ஜோவிகா, விசித்திரா, பூர்ணிமா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் Elimination கிடையாதாம் பா..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.