இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை: பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை: பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் அரசுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது. தரைவழி, வான்வழி என தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இஸ்ரேல் - ஹமாஸ்  போர் காரணமாக பாலஸ்தீனத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு போரை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளது.

நூற்றாண்டுகளாக தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முக்கியமானவையாக முனிச்(munich), ரைட் ஆன் என்டெபிள் (raid on entebble), அஜாமி (ajami), பாரடைஸ் நௌ (paradise now), லெமன் ட்ரீ (lemon tree) ஆகிய திரைப்படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 

முனிச் (munich):

1972 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட 11 இஸ்ரேல் தடகள வீரர்கள் பாலஸ்தீனர்களால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட நிகழ்வைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இப்படம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

ரைட் ஆன் என்டெபிள் (raid on entebble):

பாலஸ்தீன பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட விமானத்தில் பிணையக் கைதிகளாக சிக்கிக்கொண்ட தன் நாட்டு மக்களை இஸ்ரேல் அரசு எப்படி மீட்கிறது என்பதைக் குறித்த திரைப்படம்.

அஜாமி (ajami):

இஸ்ரேலில் உள்ள ஜாஃபா பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களைப் பற்றிய படம். அப்பகுதியில் உள்ள இரு மதத்தினர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், வாழ்க்கைப் பார்வைகள் என கச்சிதமாக விரிந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக, இப்படத்திற்கு ஒரு இஸ்ரேலியரும் ஒரு பாலஸ்தீனரும் இணைந்து கதை எழுதியுள்ளனர்.

பாரடைஸ் நௌ (paradise now): 

இஸ்ரேலின் எல்லைப் பகுதியான டெல் அவிவ்வின் சோதனைச் சாவடியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தச் செல்லும் இரண்டு பாலஸ்தீனர்களுக்கு ஏற்படும் மன தடுமாற்றங்களைப் பேசிய திரைப்படம். உலகளவில் கவனம் பெற்ற இப்படம் கோல்டன் குளோப் விருதைப் பெற்று அசத்தியது. 

லெமன் ட்ரீ (lemon tree):

இஸ்ரேலிய எல்லையில் அமைந்திருக்கும் எலுமிச்சை தோட்டத்தில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகக் கூறும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர், அம்மரங்களை வெட்ட உத்தரவிடுகிறார். ஆனால், அத்தோட்டத்திற்கு உரிமையாளரான பெண் ஒருவர், அதிகாரிகளிடமிருந்து எப்படி தன் மரங்களைக் காப்பாற்றுகிறார் என்பதை உணர்ச்சிகளுடன் பேசிய அழகான திரைப்படம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com