கெளதம் வாசுதேவ் மேனன் (ஜிவிஎம்) இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க: லியோவில் முற்றிலும் மாறுபட்ட விஜய்யை பார்க்கலாம்: லோகேஷ் கனகராஜ்

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லியோ படத்துடன் வெளியாகுமென தகவல் வெளியாகி இருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: இதுதான் தூய்மை இந்தியாவா?: ரசிகர்களை விளாசிய நடிகை திவ்யா!
இயக்குநராக இருந்த ஜிவிஎம் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். விஜய்யின் லியோவிலும் நடித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் ஜிவிஎம், “துருவ நட்சத்திரம் படம் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெறமால் நிற்க காரணம் போதிய அளவு பணமில்லை. இதன் காரணத்தால் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அது தானகவே நடந்தது. நடிப்பின் மூலம் கிடைத்த வருவாயில் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



