இதுதான் தூய்மை இந்தியாவா?: ரசிகர்களை விளாசிய நடிகை திவ்யா!

இதுதான் தூய்மை இந்தியாவா?: ரசிகர்களை விளாசிய நடிகை திவ்யா!

நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது ஏற்பட்ட குப்பைகள் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா ரசிகர்களை கேள்வி எழுப்பியுள்ளார். 
Published on

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை தொடர்ந்து 8-0 முறை பாகிஸ்தானை உலகக் கோப்பையில் வீழ்த்தியுள்ளது. 

இந்தப் போட்டி பல வகைகளிலும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிக மிக குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்பட்டுள்ளது. விசா உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. பிசிசிஐ நடத்தும் போட்டி போல் இல்லை எனவும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழில் குத்து படத்தில் அறிமுகமான நடிகை ரம்யா (திவ்யா), வாரணம் ஆயிரம் படம் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

நடிகையும் காங்கிரஸ் ஆதரவாளருமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)  மைதானத்துக்கு வெளியே இருக்கும் குப்பைகள் குறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “இது சிறப்பான போட்டி. இந்தியர்களாகிய நாம் வெற்றி. அகமதாபாத்  எப்போதும் என்னை சந்தோஷப்படுத்த தவறியதில்லை. உணவு சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த விடியோவை பார்க்கும்போது எனது இதயம் அமிழ்கிறது. ஏன் இந்தியா ஏன்? இதுதான் தூய்மை இந்தியாவா?” எனப் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com