லியோ படத்திற்கு தொடரும் சோதனை! பிரீமியர் காட்சிகள் ரத்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பிரீமியர் ரத்தானதால் முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கான அறிவிப்பு வந்தது முதலே தொடர்ந்து ஏதேனும் சர்ச்சை எழுந்துகொண்டே உள்ளது.

வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள லியோ படத்திற்கான பிரீமியர் காட்சிகள் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவு கடந்த மாதமே வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. 

நடிகர் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 6 வாரங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது. ஆனால் ரிலீஸ்க்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

லியோ படத்தை அனுப்புவதற்கு காலதாமதம் ஆனதால் அங்குள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் திரையிட இருந்த பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிரீமியர் காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கி இருந்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஐமேக்ஸ் இல்லாத தியேட்டர்களில் திட்டமிட்டபடி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல திரையரங்குகளில் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன.இருப்பினும் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் மட்டும் இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்கப்படாமல் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com