அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூனில் வெளியானது.
2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இது இவரது 12வது படமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 6 படங்கள் கைவசம்: பிரபலங்கள் வாழ்த்து மழையில் அனிருத்!
இது வெளியாகும்முன் தற்போது 13வது (விடி13) படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. எஸ்விசியின் 54வது படமாக இது தயாராக உள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடிக்கின்றனர். 2018இல் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்ற கீதா கோவிந்தம் படத்தினை இயக்கியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்தான இசையமைப்பாளர் கோபி சுந்தரும் இந்தப் படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள், விடியோக்களை படக்குழு கடந்த ஜூனில் வெளியிட்டது.
இந்நிலையில் படத்தின் பெயர், டீசர் குறித்த அறிவிப்பு வரும் அக்.18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகுமென விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.