பால் பண்ணை ஆரம்பித்த கயல் தொடர் நாயகி!

பால் பண்ணை ஆரம்பித்த கயல் தொடர் நாயகி!

கயல் தொடர் நாயகி நடிகை சைத்ரா ரெட்டி சொந்தமாக பால் பண்ணையை ஆரம்பித்துள்ளார்.
Published on

கயல் தொடர் நாயகி நடிகை சைத்ரா ரெட்டி சொந்தமாக பால் பண்ணையை ஆரம்பித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ்  நடித்துவரும் கயல் தொடர் டிஆர்பியில் முன்னனியில் உள்ளது. கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும்  எல்லா தடைகளையும் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே கதை.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாட்டில் இருந்து பால் கறக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டு, "ஒரு நாள் 50 மாடுகள் சொந்தமாக  வைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது பால் பண்ணையை ஆரம்பித்து உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகை சைத்ராவின் புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com