சித்தாரா நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு!

சித்தாரா நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு!

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பூவா தலையா தொடரில் நடிகை சித்தாரா இணைந்துள்ளார்.
Published on

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் நடிகை சித்தாரா இணைந்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல், வானத்தை போல, கயல் என ஏராளமான சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில் சித்தாரா நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு பூவா தலையா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்தொடரில் நடிகை சித்தரா பாசமான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஈரமான ரோஜாவே திரைப்பட புகழ் சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் லதாராவ், ஸ்வேதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் மற்றும் தேதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

சித்தாரா இதற்கு முன்பு கங்கா யமுனா சரஸ்வதி தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் மேலும் பராசக்தி, ஆர்த்தி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சின்னத்திரையில் சித்தாராவைக் காண அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com