சர்வதேச அங்கீகாரம் பெற்ற காதல் என்பது பொதுவுடமை படம்!

சர்வதேச அங்கீகாரம் பெற்ற காதல் என்பது பொதுவுடமை படம்!

இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் தேர்வாகியுள்ளது.
Published on

இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் தேர்வாகியுள்ளது.

2023 இந்த வருட இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் காதல் என்பது பொதுவுடமை என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 20 முதல் 28  தேதி வரை கோவாவில் நடக்கும் உலக திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
                 
காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் நவீன காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள்,  மனஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள்  நவீனப்பட்டிருக்கும் காதலை இத்திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்  இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இவர் லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல்,  ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com