
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளன.
அதே நேரம் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் படம் ரிபெல். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, மூணார் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. அதனை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிலையில் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (அக்டோபர் 26) ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
The Revolution is set to begin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.