நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை: சினிமாவில் இருந்து விலகும் அல்போன்ஸ் புத்திரன்?

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சினிமா இயக்குவதில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். 
நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை: சினிமாவில் இருந்து விலகும் அல்போன்ஸ் புத்திரன்?

‘நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர்.

கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. கோல்டு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் நாள் வெளியானது. தற்போது கிப்ஃட் எனும் படத்தினை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் காலை 11 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்போன்ஸ் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டாலும் பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பேசுவதால் வைரலாகியுள்ளது. 

அந்தப் பதிவில் அல்போன்ஸ் புத்திரன் கூறியதாவது: 

சினிமா திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஏஎஸ்டி (ஆடிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்) உள்ளதை நானே நேற்றுதான்  கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல், விடியோக்கள், குறும்படங்கள் மற்றும் முடிந்தால் ஓடிடியில் படங்களை இயக்குவேன். 

சினிமாவில் இருந்து விலக விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. என்னால் முடியாததை நான் செய்வேன் என சத்தியம் செய்ய முடியாது. உடல்நிலை சரியில்லாதபோதும் அல்லது கணிக்க முடியாத வாழ்க்கையும் சினிமா இடைவேளை திருப்பத்தைப்போல் உள்ளது. இதனால்தான் படங்கள் இயக்ககுவதில் தாமதமாகியுள்ளதென நினைக்கிறேன். ஆனால் உங்களை மகிழ்விப்பதை நிறுத்த மாட்டேன் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com