வெளியானது ரத்தம் டிரைலர்!
தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.
இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தேசிய விருதுகள் படத்தின் தரத்தினை நிர்ணயிப்பதில்லை: வெற்றிமாறன்
முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல், இரண்டாவது பாடல், இசை வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையான பேச்சு என சகலவிதமான தமிழ் சினிமாவின் போக்கினை கிண்டல் செய்து படத்தின் ரிலீஸ் தேதியினை விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரினை இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளனர். படம் செப்.28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.