நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?

விஜய்தான் சூப்பர் ஸ்டார்; லியோவில் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி...: நடிகர் ராமகிருஷ்ணன்

இயக்குநரும் நடிகருமான ராமகிருஷ்ணன் நடிகர் விஜய்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ளார். 

Updated On :

2009ஆம் ஆண்டு வெளியான குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் ராமகிருஷ்ணன். பின்னர் முரண் எனும் படத்தில் நடித்தார். துணை இயக்குநராக இருந்த இவர் பின்னர் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தினை இயக்கினார். 

Story image

நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மாமன்னன் படத்தில் நடிகர் ராமகிருஷ்ணன் 

மாமன்னன் படத்தில் நடிகர் ராமகிருஷ்ணன் 

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. 

Story image

நேர்காணல் ஒன்றில் நடிகர் ராமகிருஷ்ணன், “தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய்தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாளை வேறு யாராவது இருப்பார்கள். இங்கு எதுவும் நிரந்தரமில்லை. லியோவில் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனது ரசிகர் என்று கூறினார். எனக்கு மிக்க மகிழ்ச்சி. லியோ படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தினை தரும். வேற லெவலில் உருவாகி வருகிறது. படத்தில் சுமார் 20 நிமிஷம் நான் இடம்பெறுவேன் என நினைக்கிறேன். தொழிற்சாலையில் உருவாகியிருக்கும் ஒரு சண்டைக் காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். அற்புதமாக உருவாகியிருக்கிறது லியோ” எனக் கூறியுள்ளார். 

ஏற்கனவே ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையானது. தற்போது மீண்டும் சுப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பலரும் பேசி வருகிறார்கள். லியொ இசை வெளியீட்டில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் குறித்து பேசுவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.