
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.
இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ரஜினியின் 171வது பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்
கடந்த வாரம் படத்தின் டிரைலர் வெளியான நிலையில், செப்டம்பர் 28-ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு மாற்றம் செய்து படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.