
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த்தின் 170வது படம் குறித்த பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், 171வது படம் குறித்த உறுதியான தகவல்கள் இன்று வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 171வது பட அறிவிப்பை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி.
இதையும் படிக்க.. இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்
இப்படத்தை எழுதி இயக்குபவர் லோகேஷ் கனகராஜ்.
தலைவரின் 171வது படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துடன் சன்பிக்சர்ஸ் மீண்டும் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ரஜினி நடித்த 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு செக் மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்!
இரண்டு பிஎம்டபிள்யூ ரக கார்களை ரஜினியின் இல்லத்திற்குக் கொண்டு வந்த கலாநிதி மாறன் ரஜினிக்கு பிடித்த ‘பிஎம்டபிள்யூ எக்ஸ்7’ காரை பரிசாக வழங்கினார்.
ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...