குஷி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஷிவ நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரும் செப்.1 ஆம் தேதி வெளியானது.
காதல், காமெடி, எமோஷனல் என தெலுங்கில் நல்ல வரவேற்பும், தமிழில் கலவையான விமரிசனமும் பெற்று குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ஜவான் திரைப்படம் வெளியானதால், குஷி திரைப்படம் திரையிடப்பட்டு இருந்த பெரும்பாலான திரையரங்குகளில் ஜவான் படம் திரையிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க: போலா ஷங்கர்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


