

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘புரோ’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக உஸ்தாத் பகத் சிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கி வருகிறார். நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
இதையும் படிக்க: காந்தாரா - 2: உடல் எடையைக் குறைத்த ரிஷப் ஷெட்டி!
இந்நிலையில், இப்படத்தில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிகை கௌதமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ராதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.