உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

காந்தாரா - 2: உடல் எடையைக் குறைத்த ரிஷப் ஷெட்டி!

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா இரண்டாம் பாகத்திற்காக உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:44 pm IST

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இதற்காக, மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி 11 கிலோ வரை உடல் எடையைக் குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் திடமான உடலில் காணப்பட்டவர் இரண்டாம் பாகத்திற்காக எடையைக் குறைத்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.