
1992இல் தர்லே நன் மகா எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் உபேந்திரா. பின்னர் அவர் ஷிவ ராஜ்குமாரை வைத்து இயக்கிய ஓம் திரைப்படம் கன்னடத்தில் புதிய அலையை ஏற்படுத்தியது. பின்னர் நடிகராகவும் இயக்குநராகவும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஓசிடி எனும் மன நோய் உள்ளது: விஷால்!
நடிகர். இயக்குநர், பாடலாசிரியர் மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் தனது பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளார் உபேந்திரா. யுபிபி எனும் உத்தம பிரஜாகிய கட்சியினை 2018இல் உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2023இல் அவர் கப்ஜா படத்தில் நடித்திருந்தார். த்ரிசூலம், புத்திவந்தா2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ஒருவாரம் முன்பு டீசர் அப்டேட் கேட்டவர்களுக்கு, “டீசர் பார்க்காமல் படம் பார்த்தால்தான் நன்றாக இருக்கும்” எனக் கூறியிருந்த விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தானே இயக்கி நடித்துள்ள பான் இந்திய படமான யுஐ எனும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இந்த டீசர் வழக்கமான ஒன்றாக இல்லை. விஷுவல்ஸ் இன்றி சப்தங்களோடு மட்டுமெ வெளியாகியுள்ளது. இந்த டீசர் உங்கள் கற்பனைக்கு என முடிகிறது.
நடிகர் உபேந்திரா பிறந்தநாளில் வெளியான இந்த டீசரினால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.