பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

வாகன விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!
Published on
Updated on
1 min read

வாகன விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார்.

அதன்படி, காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று விழுந்தததில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார்.

டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பிணையில் வெளிவர முடியாதபடி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com