சமுத்திரக்கனியின் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

சமுத்திரக்கனியின் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Published on


சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி வரும் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து தெலுங்கில் வெளியான விமானம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் திரு.மாணிக்கம் என்ற திரைப்படத்தில் தற்போது சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா நடிக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா,  இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும், ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் டீசர் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com