
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த நிலையில், இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...