குக் வித் கோமாளி பிரபலத்துக்கு பெண் குழந்தை!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குக் வித் கோமாளி பிரபலத்துக்கு பெண் குழந்தை!
Published on
Updated on
1 min read

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் புகழ்.

இதனைத் தொடர்ந்து, தற்போது திரைபடங்களிலும் நடித்து வருகிறார். மிஸ்டர் ஸூ கீப்பர், துடிக்கிறது மீசை என்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

கைதி,  வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16 1947  உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் புகழ் நடித்திருந்தார். 

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பென்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

முன்னதாக, புகழ் - பென்ஸி தம்பதியினர் குழந்தைப்பேறு பெறவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களின் சீமந்தம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த நிலையில், புகழ் தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com