நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்திய அளவில் பேசப்பட்ட இப்படத்தின் பிரம்மாண்டம், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்தது.
வசூலைக் குவித்த இப்படத்தில் அமரேந்திர பாகுபலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் நட்சத்திர நடிகராக உருமாறினார்.
அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்காக, மைசூர் அருங்காட்சியத்தில் பாகுபலி தோற்ற பிரபாஸின் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: மகன்களுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா!
இந்நிலையில், பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா, “எங்களிடம் முன் அனுமதி பெறாமலேயே பாகுபலி சிலையை அருங்காட்சியத்தில் வைத்துள்ளனர். இதை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், அருங்காட்சியத்தின் உரிமையாளர் பாஸ்கர், “சிலையை ஒப்புதல் பெறாமல் வைத்ததற்காக தயாரிப்பாளர் அவருடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. அதனால், சிலையை அகற்ற முடிவுசெய்துள்ளோம்” என பதிலளித்துள்ளார்.
இந்த தனியார் அருங்காட்சியத்தில் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார், விஷ்ணு வர்தன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பலரின் மெலுகு சிலை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! - டிரம்ப்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

