
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய்சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் 50வது படம் படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இது குறித்து, “விஜய் சேதுபதியின் 50வது படம் இதுதான் என்பது எங்களுக்கும் முதலில் தெரியாது. இந்தப் படம் பழிவாங்கும் கதையாக உருவாகி வருகிறது. இதில் இரண்டு புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 85 நாள்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இதில் 50நாள்கள் முடிந்து விட்டது. இன்னும் 10 நாளில் விஜய் சேதுபதியின் பகுதி முடிந்துவிடும்” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.