
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
தமிழில் யூனிவர்சிட்டி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. அதன்பின், பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி பிரபலமடைந்தார். சில தெலுங்குப் படங்களிலும் நடித்தவர் 2009-ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தன் கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களைப் பரபரப்பிலேயே வைத்திருப்பவர்.

இந்நிலையில் சமீபத்தில், ஷெர்லின் சோப்ராவிடம் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர் ஒருவர், “நீங்கள் ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்வீர்களா?” எனக் கேள்வியெழுப்பினார்.
இதையும் படிக்க: விபத்தில் சிக்கியவருக்கு காரை நிறுத்தி உதவிய ராகுல் காந்தி!
இதைக்கேட்ட ஷெர்லின் உடனடியாக, “கண்டிப்பாக. ஆனால், ஒரு நிபந்தனை. திருமணத்திற்குப் பின், என் குடும்பப் பெயரை மாற்ற மாட்டேன்” எனப் பதிலளித்து வைரலாகியுள்ளார்!