நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நிற்க மீண்டும் தொலைக்காட்சியிலேயே வேலைக்கு சென்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வாழ்க்கை இளைஞர்கள் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.
இதையும் படிக்க: ஜெயிலர் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷிவ ராஜ்குமார்!
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் அமோக வெற்றி பெற்றது. நடிகர் விஜய்யுடன் எடுத்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் நெல்சன் மிகவும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் நாள் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றன. ஒரே நாளில் உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ரன்வீர் சிங்-ஆலியா பட் திரைப்படம்: ரூ.250 கோடி வசூல்!
இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் நெல்சன், “மீண்டும் விஜய் சாருடன் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். விஜய்சார்தான் அதனை தெரிவிக்க வேண்டும். கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. கமர்ஷியல் படம் எடுக்க நினைத்தால் அதன் நோக்கம் வெற்றியடைந்தால் போதும். விமர்சன ரீதியாக படமெடுக்க பெரிய ஆட்கள் தேவையில்லை. படத்தின் வெற்றி ஒருவாரம் அல்லது 10, 20 நாள்கள் இருக்கும். பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் படத்தினை இயக்கும் அனுபவம் பெரிது. ஒரு படத்தினை இயக்க ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் ஆகும். அப்போது ஏற்படும் அனுபவமே சிறந்தது. எனக்கு அதுதான் முக்கியமாகவும் தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் நெல்சன் மீதளவுக்கு சமீபத்தில் கிண்டல்கள் யாருக்குமில்லை. ஆனால் அதையெல்லாம் மீறி எப்போதும் ஜாலியாக இருக்கு நெல்சன் வெற்றி பெற வேண்டுமென பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகனாகவே மாறினார்கள்.
நெல்சனும் அதை நிறைவேற்றி விட்டாரென ஜெயிலர் படத்தின் வசூல் விவரங்களும் ரசிகர்களின் கொண்டாட்டங்களும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தும் தெரிவிக்கின்றன.