ரம்யா பாண்டியனின் சகோதரியை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்!

நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரியை அசோக் செல்வன் கரம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ரம்யா பாண்டியனின் சகோதரியை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்!

நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரியை அசோக் செல்வன் கரம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் அசோக் செல்வன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார். 

இவருக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் திருநெல்வேலியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அதுவே நாளடைவில் காதலாக மாறி உள்ளது. 

இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அண்மையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இவர்களது திருமண தேதியை இருவரும் சேர்த்து விரைவிலேயே அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர் அருண் பாண்டியனின் சகோதரர் மகள் தான் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com