நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நிற்க மீண்டும் தொலைக்காட்சியிலேயே வேலைக்கு சென்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வாழ்க்கை இளைஞர்கள் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் அமோக வெற்றி பெற்றது. நடிகர் விஜய்யுடன் எடுத்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் நெல்சன் மிகவும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஆக. 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றன. 4 நாள்களில் உலகளவில் இப்படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நேர்காணல் ஒன்றில் இயக்குநர் நெல்சன், “சினிமா எடுக்க விரும்புவர்கள் பிரேக்கிங் பேட் இணையத் தொடரினை பார்க்க வேண்டும். சினிமா ரசிகர்களுக்கு பைபிள் மாதிரி. நான் பார்த்த்திலேயே மிகச் சிறந்த படம் இதுதான். சரியாக எழுதப்பட்ட தொடர். அதன் கதாபாத்திரங்கள் வளர்ச்சி முடிவு என அருமையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் படங்களிலும் பிரேக்கிங் பேட் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். ‘பிரேக்கிங் பேட்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. 5 சீசன்கள் உள்ள இந்தத் தொடரில் மொத்தம் 64 எபிசோடுகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசார களத்தில் வானதி சீனிவாசனின் மகன்கள்

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்

கூட்டணிக் கட்சிகளை சிதைக்கும் முதல்வா்: பழ.கருப்பையா குற்றச்சாட்டு

தோ்தல் பிரசாரத்துக்காக ஏப்.18-இல் பிரதமா் நரேந்திர மோடி வருகை: கோவையில் முன்னேற்பாடு பணி ஆய்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


