
சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன. ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இதையும் படிக்க: சினிமா எடுக்க நினைப்பவர்களுக்கு இந்தப் படம் பைபிள்: நெல்சன் கூறிய படம் எது?
மாவீரன் இசை வெளியீட்டு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் நல்ல உடற்கட்டுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைக்கு குல்லா அணிந்திருப்பார். எனவே ‘எஸ்கே 21’ படத்தில் புதிய தோற்றம் நிச்சயம் என அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிக்க: அர்ஜுன் பிறந்தநாள்: லியோ கிளிம்ஸ் விடியோ வெளியீடு
இந்நிலையில் படத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: இந்தியன் - 2 சிறப்புப் போஸ்டர் வெளியீடு
சமீபத்தில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அது உண்மையா அல்லது எடிட் செய்யப்பட்டதா என படக்குழு எதுவும் கூறவில்லை.
இந்நிலையில் முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென காத்திருந்த ரசிகர்களுக்கு சுதந்திர நாள் வாழ்த்தை சிவகார்த்திகேயன் பேசும் விடியோ மூலம் வெளியிட்டது படக்குழு. இதனை பகிர்ந்து தாய் மண்ணுக்கு வணக்கம் என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
தாய் மண்ணிற்கு வணக்கம்#IndependenceDay#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21 #SK21JoiningForces #RKFIProductionNo_51 @ikamalhaasan@Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM… pic.twitter.com/2ZsifwaMEt
— Raaj Kamal Films International (@RKFI) August 15, 2023
படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடந்து வருவதால் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளாரோ என கேள்வி எழுந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...