
முத்தழகு தொடரில் நடித்துவரும் வைஷாலி, சமீபத்தில் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காரில் பயணிக்கும் போது பாதுகாப்பிற்காக சீட் பெல்ட்டை அணியுங்கள். நான் சீட் பெல்ட் அணிந்திருந்த போதிலும், எனது கார் விபத்துக்குள்ளானபோது ஏர்பேக் என்னை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியது. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம்” எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் வைஷாலிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து, அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் சீசன் 7-ல் களமிறங்கும் ஆண் செய்தி வாசிப்பாளர்!
நடிகை வைஷாலி ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், நம்ம வீட்டு பொன்னு உள்ளிட்ட தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகராசி தொடரில் நடித்திருந்தார். தற்போது, முத்தழகு தொடரில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.