
ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் நடிகருமான சேரன் பிறந்தநாளில் அவரது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர் வெளியானது. லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்!
முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார். பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்!
இதையும் படிக்க: வைரலாகும் சூர்யாவின் சிக்ஸ் பேக் புகைப்படம்!
பிரபலங்களுக்கு மத்தியில் துப்புரவு பணியாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டது வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது.
சமீபத்தின் இதன் டிரைலர் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் படம் செப்.7ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...