ராக்கெட்ரி, கடைசி விவசாயி.. யாருக்கெல்லாம் தேசிய விருதுகள்?

2021 ஆம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்ரி, கடைசி விவசாயி.. யாருக்கெல்லாம் தேசிய விருதுகள்?
Published on
Updated on
2 min read

மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய  திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி  தேர்வாகியுள்ளது.

இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவித்துள்ளனர்.

69-வது தேசிய விருதுப் பட்டியல்:

சிறந்த படம் - ராக்கெட்ரி ( ஹிந்தி, இயக்கம் - ஆர்.மாதவன்)

குழந்தைகளுக்கான சிறந்த படம் - காந்தி அண்ட் கோ (இயக்குநர் - மனிஷ் சைனி)

சிறந்த சூழலியல் திரைப்படம் - ஆவாசவியூகம் (மலையாளம், இயக்குநர்-கிரிஷாந்த்)

சிறந்த பொழுதுபோக்கு படம் - ஆர்ஆர்ஆர் (இயக்குநர் - எஸ்.எஸ்.ராஜமௌலி)

நர்கிஸ் தத் விருது - தி காஷ்மீர் பைல்ஸ் (இயக்குநர் - விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி)

சிறந்த இயக்குநர் - நிகில் மகாஜன் (கோதாவரி - மராத்தி)

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது - விஷ்ணு மோகன் (மேப்படியான் - மலையாளம்)

சிறந்த நடிகர் - அல்லு அர்ஜுன் (புஷ்பா)

சிறந்த நடிகை - ஆலியா பட் ( கங்குபாய் காத்தியவாடி), க்ரித்தி சனோன் (மிமி)

சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி (மிமி)

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் பைல்ஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பாவின் ரபாரி (லாஸ்ட் பிலிம் ஷோ)

சிறந்த திரைக்கதை - நயாட்டு (மலையாளம் - ஷாகி கபீர்), கங்குபாய் காத்தியவாடி (சஞ்சய் லீலா பங்சாலி)

சிறந்த ஒளிப்பதிவாளர் - அவிக் முகோபதயா (சர்தார் உத்தம்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் -  வீரா கபூர் (சர்தார் உத்தம்)

சிறந்த எடிட்டிங் - சஞ்சய் லீலா பஞ்சாலி (கங்குபாய் காத்தியவாடி)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)

சிறந்த நடன இயக்குநர் - பிரேம் ரக்‌ஷித் (ஆர்ஆர்ஆர்)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - வி.ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)

சிறந்த இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா), எம்.எம்.கீரவாணி (ஆர்ஆர்ஆர்)

சிறந்த பாடல் -  தம் தம் தம்( பாடலாசிரியர் - சந்திரபோஸ், திரைப்படம் - கொண்ட போலாம், தெலுங்கு)

சிறந்த பின்னணிப் பாடகர் - கால பைரவா (கொமுரம் பீமுடு - ஆர்ஆர்ஆர்)

சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்ரேயா கோஷல் (மாயவா தூயவா - இரவின் நிழல்)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - பிரதிஷீல் சிங் டிசுசா ( கங்குபாய் காத்தியவாடி)

மொழிவாரிப் பிரிவில்:

சிறந்த தமிழ்ப் படம் - கடைசி விவசாயி (இயக்குநர் - மணிகண்டன்)

சிறந்த மலையாளப் படம் - ஹோம் (இயக்குநர் - ரோஜின்.பி.தாமஸ் )

சிறந்த கன்னடப் படம் - 777 சார்லி (இயக்குநர் - கிரண்ராஜ்.கே )

சிறந்த தெலுங்கு படம் - உப்பென்னா (இயக்குநர் - சனா புஜ்ஜிபாபு )

சிறந்த மராத்தியப் படம் - ஏக்தா க்யா சாலா (இயக்குநர் - சலீல் ஸ்ரீனிவாஸ் குல்கர்னி)

சிறந்த ஹிந்தி படம் - சர்தாம் உத்தம் (இயக்குநர் - சுஜித் சிர்கார் )

சிறப்பு விருதுகள்(நடிப்பு) - நல்லாண்டி (கடைசி விவசாயி), இந்திரன்ஸ் (ஹோம் - மலையாளம்), ஜஹனரா பேகம் (அனூர்), ஆரண்ய குப்தா மற்றும் பிதான் பிஸ்வாஸ் (ஹில்லி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.