நாட்டின் 69-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன். இதில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் படங்களுக்கு எந்த ஒரு விருதும் தரப்படவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் பீம் படம் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நல்லாண்டி - மறக்க முடியாத நாயகன்!
ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது தரவில்லை என பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் அசோக் செல்வன், “கடைசி விவசாயி படம் நல்ல தேர்வு ஆனால் ஏன் ஜெய் பீம் படத்திற்கு எந்த விருதுமில்லை?” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தொடர் தோல்விகள்: மார்க்கெட்டை இழக்கும் நிவின் பாலி!
பிரபல தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெய் பீம் என பதிவிட்டு இதயம் உடையும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுசீந்திரனும் ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்கப்படாதது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.