
சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் தனது நீண்டநாள் காதலி மோனிகாவை கரம்பிடித்தார்.
யுவன் தயாரித்து இசையமைத்த பியார் பிரேமா காதல் திரைப்படம் 2018இல் வெளியானது. இதில் ஹரிஷ் கல்யாண், ரைஸா நடித்திருந்தார். இந்தப் படத்தினை இயக்கியிருந்தார் இலன். தற்போது இந்த இயக்குநர் கவினுடன் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: தனி ஒருவன் 2: அதிகாரபூர்வ அறிவிப்பு! (விடியோ)
இதையும் படிக்க: ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா, விஜய் தேவரகொண்டா: இதுதான் காரணமா?
ரைஸ் என் டெயிர்மெண்ட், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
சிறப்பு முன்னோட்டம் ஆக.31ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.