
ஷிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் சீசன் 7: இவர்கள் தான் போட்டியாளர்களா?
சமந்தா, நாக சைதன்யா வைத்து எடுக்கப்பட்ட ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜவான்: ராமையா வஸ்தாவையா பாடல் எப்போது தெரியுமா?
சமீபத்தில் வெளியான குஷி படத்தின் டிரைலர், சமூக வலைதளங்களில் வைரலானது. குஷி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ரத்தமாரே ரத்தமாரே...: விக்னேஷ் சிவன் பகிர்ந்த குடும்ப புகைப்படங்கள்!
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தாவுடன் விடியோ கால் பேசுவது போல விடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
“இது நிஜமான விடியோ கால் இல்லை. சமந்தா கண்ணாடியில் விடியோ பதிவு செய்வது தெரிகிறது. இந்த விடியோ எடிட் செய்யப்பட்டது” என ரசிகர் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கமெண்ட்டும் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...