கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

பிக் பாஸ் சீசன் 7: இவர்கள் தான் போட்டியாளர்களா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

Published On :

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதாக கமல் கூறும் இரண்டாவது முன்னோட்ட விடியோ வைரலாகியுள்ளது.

ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும், இன்னொரு வீட்டில் முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்களில் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, நடிகர் அப்பாஸ், தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி ஜேக்லின், ஸ்ரீதர் மாஸ்டர், நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ரேகா நாயர், நடிகர் பிரித்விராஜ்(பப்லு) உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பொது மக்களில் இருந்து கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், போட்டியின் தொடக்க விழாவின்போது தான் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

இந்த சீசன் அக்டோபர் 8 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்