காதலரை மணந்த அஞ்சு குரியன்!
திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த அஞ்சு குரியன்...

அஞ்சு குரியன்
நடிகை அஞ்சு குரியன் தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அஞ்சு குரியன். நேரம் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ஓம் ஷாந்தி ஓஷானா, பிரேமம், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார்.
தமிழில் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி ஜூலை காற்றினில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மாட்ஃபோன் சிம்ரனும், இதயம் முரளி வரை சொல்லிக்கொள்ளும் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அஞ்சு குரியன் தன் நீண்ட நாள் காதலரான ரோஷன் கரிப்பரம்பில் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இதன் புகைப்படங்களையும் விடியோவையும் கண்ட ரசிகர்கள் அஞ்சு குரியனை வாழ்த்தி வருகின்றனர்.
Actress Anju Kurian married her boyfriend.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


