லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய பட போஸ்டர்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து புதிய படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை “சில நேரங்களில் சில மனிதர்கள்” மற்றும் “பாம்” படங்களின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்தப் புதிய படத்துக்கு “ஆர்எக்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு இன்று (நவ. 8) அறிவித்துள்ளது.
ஆர்எக்ஸ் (Rx) என்பது மருத்துவத் துறையில் மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவக் குறிப்பு அல்லது மருந்துச் சீட்டைக் குறிக்கும் எழுத்துகளாகக் கருதப்படுகின்றன.
இப்படத்துக்கு நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரும் கவனம் பெற்ற “கார்கி” படத்தின் எழுத்தாளர் ஹரிஹரன் ராஜு திரைக்கதை எழுதியுள்ளார்.
மருத்துவத் துறை சார்ந்த புதுமையான கதைகளத்துடன் உருவாகி வருவதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The title of the new film being produced by director Lokesh Kanagaraj has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


