தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது! ரயில் சேவை நிறுத்தம்!பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

லோகேஷ் கனகராஜை இயக்கும் மிஷ்கின்!

மிஷ்கின் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம்...

மிஷ்கின் - லோகேஷ் கனகராஜ்

Published On :

இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கிய பிசாசு - 2 மற்றும் டிரெயின் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நீண்ட காலமாக வெளியாகாமல் இருக்கின்றன. இதில், பிசாசு - 2 வெளியாவதில் சிக்கல் நீடிப்பதால் அப்படம் குறித்து எந்த அப்டேட்களும் வெளியாவதில்லை.

ஆனால், டிரெயின் திரைப்படத்தின் அறிவிப்புகள் மட்டும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதே நேரம், மிஷ்கின் திரைப்படங்களிலும் தீவிரமாக நடித்து வருவதால் ரசிகர்களின் வெளிச்சத்திலும் இருக்கிறார். இருந்தாலும் இயக்குநர் மிஷ்கின் திரைப்பட ரசிகர்களுக்கு அவர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்விகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “பிசாசு - 2 மற்றும் டிரெயின் திரைப்படங்கள் வெளியானாலும் சரி வெளியாகவில்லை என்றாலும் சரி, எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் அதைக் கடந்து சென்றுவிட்டேன். இப்போது, லோகேஷ் கனகராஜுக்கு கதை சொல்லியிருக்கிறேன். அவருக்கும் பிடித்துவிட்டது. எப்போது வருகிறாரோ அப்போது அப்படத்தை இயக்குவேன். மேலும், நடிகர் நரேனை வைத்து அஞ்சாதே - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதுபோக, இச்சை என்கிற கதையை எழுதி முடித்துள்ளேன். 26 கதைகள் இருக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Mysskin has announced that he is set to direct a new film starring director Lokesh Kanagaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER