

நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான பூஜை கலவையான விமர்சனங்களை பெற்றன.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.
எம்.சுகுமார் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியளிக்க பாடலாசிரியர் விவேக் பாடல் எழுத உள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிர்சாந்த் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடிகர் விஷால் படக்குழுவுடன் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் இயக்குநர் ஹரி, பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால், “இந்த வயதிலும் ரஜினிகாந்த் இளம் நடிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துக்கொண்டிருக்கிறார். தேசிய விருதுகள் உள்பட எந்த விருதுகள் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவருக்கு விருது அளிப்பதும் மறுப்பதும் 4 பேர் எடுக்கும் முடிவில் உள்ளதில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் என்பது ஒரு துறையோ தொழிலோ அல்ல. அது ஒரு சமூகசேவை. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஒரு வாக்காளனாக ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.